×

கொல்கத்தாவுக்கு 143 ரன்கள் வெற்றி இலக்கு – #IPL

ஐபிஎல் கொண்டாட்டம் உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் போட்டியும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொண்டதாக உள்ளதால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்றைய போட்டியில் சன்ரைஸர் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரு அணிகளுக்கும் இரண்டாம் போட்டி இது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தவை. டாஸ் வின் பண்ணிய ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்துள்ளார். ஓப்பனிங் இறங்கிய டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் இறங்கினர். பெரிதும் எதிர்பார்த்த
 

ஐபிஎல் கொண்டாட்டம் உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் போட்டியும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொண்டதாக உள்ளதால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இன்றைய போட்டியில் சன்ரைஸர் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரு அணிகளுக்கும் இரண்டாம் போட்டி இது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தவை.

டாஸ் வின் பண்ணிய ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்துள்ளார்.

ஓப்பனிங் இறங்கிய டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் இறங்கினர். பெரிதும் எதிர்பார்த்த பேர்ஸ்ட்டோ 5 ரன்களோடு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்த நிலையில் சக்கரவர்த்தி வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

மனிஷ் பாண்டே  38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ரஸல் பந்தில் அவுட்டானர். அப்போது அணியின் ஸ்கோர் 121. சாஹா 31 ரன்களில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்காக 143 நிர்ணயித்துள்ளது.