×

’தோனி 3-ம் இடத்தில் பேட்டிங்கில் இறங்க வேண்டும்’ கவுதம் கம்பீர் ஆலோசனை

ஐபிஎல் கொண்டாட்டங்கள் வேகமெடுத்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தகவல்கள் ரசிகளுக்கு வருத்தத்தையும் சோர்வையும் தந்திருக்கின்றன. ஜபிஎல் 2020 போட்டிகள் கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்டன. ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதியிலிருந்து போட்டிகள் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதற்கு முன் கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டனர். அதன்பின் ஐக்கிய அமீரகம்
 

ஐபிஎல் கொண்டாட்டங்கள் வேகமெடுத்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தகவல்கள் ரசிகளுக்கு வருத்தத்தையும் சோர்வையும் தந்திருக்கின்றன.

ஜபிஎல் 2020 போட்டிகள் கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்டன. ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதியிலிருந்து போட்டிகள் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதற்கு முன் கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டனர். அதன்பின் ஐக்கிய அமீரகம் புறப்பட்டனர்.

அங்கு வீரர்கள் மற்றவர்களைச் சந்திப்பது முதல் பயிற்சி எடுப்பது வரை பலவித கட்டுபாட்டுகள் விதிக்கப்பட்டன. காரணம் கொரோனா நோய்த் தொற்று வீரர்களுக்குப் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே.

ஆனாலும், சென்னை அணியைச் சேர்ந்தவர்கள் 13 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றாகி உள்ளது. சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலான போட்டிகளில் மூன்றாம் இடத்தில் பேட்டிங்கில் களம் இறங்குபவர் சின்ன தல சுரேஷ் ரெய்னா தான். முதல் ஐந்து ஓவர்களில் இறக்கப்பட்டால் நிதானமாகவும் 10 ஓவர்களுக்குப் பிறகு இறங்க வேண்டியிருந்தால் அதிரடியாகவும் ஆட்டத்தில் போக்கு அறிந்து விளையாடுவார் சுரேஷ் ரெய்னா.

தற்சமயம் அவர் அணியில் இல்லாதது நிலையில் மூன்றாம் நபராக ஆட இறங்கப்போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

gambir and dhoni PC: twitter

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர கவுதம் கம்பீர் இதற்கு ஓர் ஆலோசனையைத் தந்துள்ளார். ’ மூத்த அனுபவ வீரர் எம்.எஸ். தோனியே மூன்றாம் இடத்தில் இறங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஓராண்டு காலமாக போட்டிகளில் ஆடாத தோனி, நிதானித்து ஆடுவதற்கு வாய்ப்பாக அமையும்’ என்று கூறியிருக்கிறார்.