×

சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி – மயங் அதிரடி வீண்! DCvsKXIP

ஐபிஎல் திருவிழாவின் இரண்டாம் ஆட்டம் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற வென்ற பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் என முடிவு செய்தார். குறைவான ஸ்கோரில் எதிரணியை அடக்குவதே அவரின் எண்ணமாக இருந்தது. பேட்டிங் தொடங்கிய டெல்லி கேப்பிடல் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ப்ரத்திவ் ஷா 5 ரன்களோடும், அதிரடி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் டக் அவுட்டோடு திரும்பினர். ஹெட்மயர் 7 ரன்களோடு விடைபெற
 

ஐபிஎல் திருவிழாவின் இரண்டாம் ஆட்டம் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் நேற்றிரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற வென்ற பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் என முடிவு செய்தார். குறைவான ஸ்கோரில் எதிரணியை அடக்குவதே அவரின் எண்ணமாக இருந்தது.

பேட்டிங் தொடங்கிய டெல்லி கேப்பிடல் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ப்ரத்திவ் ஷா 5 ரன்களோடும், அதிரடி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் டக் அவுட்டோடு திரும்பினர்.  ஹெட்மயர் 7 ரன்களோடு விடைபெற 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எனும் மோசமான நிலையில் தவித்தது டெல்லி.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சுதாரித்துக்கொண்டு நின்று ஆடினார். அவரும் ரிஷப் பண்ட்டும் நல்ல பார்டனர்ஷிப் தந்தனர். பத்து ஓவர்களுக்கு இந்த ஜோடியைப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் ரன்களும் அதிரடியாக ஏறவில்லை.

13.6 வது ஓவரில் 31 ரன்கள் எடுத்தநிலையில் பண்ட் அவுட்டானதுபோது 84 ரன்களே அணியின் ஸ்கோர். அடுத்த ஓவரிலேயே ஸ்ரேயாஸ் 39 ரன்களோடு அவுட்டாக, அணியின் ஸ்கோர் 120 யைத் தாண்டாது என்றே பலரும் நினைத்தனர்.

ஆனால், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடிய மார்கஸ் ஸ்டொயின்ஸ் களத்தில் இறங்கியதும் ஆட்டம் சூடு பிடித்தது. 3 சிக்ஸர்களும் 7 பவுண்ட்ரிகளுமாக விளாசித்தள்ளினார். 21 பந்துகளை மட்டுமே சந்தித்த ஸ்டொயின் 53 ரன்களைக் குவித்தார். 

இதனால் அணியின் ஸ்கோர் 150 யைக் கடந்தது. 19.5 ஓவரில் ஸ்டொயின்ஸ் அவுட்டானார். பஞ்சாப் அணியின் பவுலர் கிறிஸ் ஜோர்டன் ஒரே ஓவரி 30 ரன்களை வாரி வழங்கியதால், டெல்லி அணி 157 எனும் நல்ல ஸ்கோரை அடைந்தது.

பஞ்சாப் பவுலிங் தரப்பில் முகம்மது ஷமி, 4 ஓவர் வீசி, 15 ரன்களை மட்டுமே தந்தார்.

அடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமி, கே.எல்.ராகுல் மற்றும் மயங் அகர்வால் ஓப்பனிங் இறங்கினார்கள். மிக நிதானமாக இந்த ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. 21 ரன்கள் எடுத்த நிலையில் 4.3 ஓவரில் கே.எல்.ராகுல் அவுட்டானார். 

அடுத்து வந்த கருன் நாயர் 1, நிக்கோலஸ் பூரான் 0, மேக்ஸ்வெல் 1, கான் 12 என வரிசையாக சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. பஞ்சாப் இனி வெல்லவே முடியாது என்ற நிலையில் இருந்ததை மயங் மாற்றினார்.

தனது நிதானமான ஆட்டத்தால் விக்கெட்டைக் காப்பாற்றிக்கொண்டிருந்த மயங் அதிரடி ஆட்டத்திற்குத் தாவினார். கவுதம் அதற்கு உதவினார். இதனால், கடைசி 5 பந்தில் 6 ரன்கள் எனும் நிலையை வரும் அளவுக்கு அதிரடி காட்டினார் மயங் அகர்வால். அடுத்து ஆட்டத்தை சமன் செய்யவும் செய்தார்.

இரண்டு பந்துகளில் ஒரு ரன் எனும் நிலையில் மயங் பவுண்ட்ரிக்கு அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானர். ஒரு பந்து ஒரு ரன் எனும் நிலையில் அந்த பந்தில் ஜோர்டன் அவுட்டாக மேட்ச் சூப்பர் ஓவர்க்குத் தள்ளப்பட்டது.

சூப்பர் ஓவரில் கேப்டன் ராகுல், நிக்கோலஸ் பூரான் இருவரும் இறங்கினர். மயங் நல்ல ஃபார்மில் இருக்கும்போது நிக்கோலஸை இறக்கியது தவறு. இரண்டு பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்த ராகுல் அவுட்டானார். அடுத்து மேக்ஸ்வெல் இறக்கப்பட்டார். நிக்கோலஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாக சூப்பர் ஓவர் இன்னிங்ஸ் முடிவடைந்தது.

ஒரு ஓவரில் 3 ரன்கள் எனும் மிக எளிதான இலக்கைச் சந்திக்க டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸூம், ரிஷப் பண்ட்டும் இறங்கினர். முகம்மது ஷமி வீசிய பந்தில் ஒன்று வொயிடாகவும் பண்ட் இரு ரன்களை எடுக்கவும் டெல்லி வென்றது.

எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் கோட்டை விட்டது. மயங் அகர்வாலில் பொறுப்பான ஆட்டம் வீணானது. பஞ்சாப்ப் வென்றிருந்தால் மயங் அகர்வாலுக்கு கிடைக்க வேண்டிய மேன் ஆஃப் த மேட்ச் மார்கஸ் ஸ்டொயின் பெற்றார்.