×

24 விக்கெட்… 106 ரன்கள்… சேப்பாக்க கில்லி அஸ்வினுக்கு ஐசிசி விருது!

சர்வதேச அளவில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடும் வீரரைத் தேர்ந்தெடுத்து, மாதத்தின் சிறந்த வீரர் (ICC Men’s Player of the Month award) என்ற விருது வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது. விருதை அடுத்த மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சமயம் தான் இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு போட்டியில் வெற்றி காணவும், ஒரு போட்டியில் டிரா செய்யவும் பேருதவியாக ரிஷப் பண்ட் இருந்தார்.
 

சர்வதேச அளவில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடும் வீரரைத் தேர்ந்தெடுத்து, மாதத்தின் சிறந்த வீரர் (ICC Men’s Player of the Month award) என்ற விருது வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது. விருதை அடுத்த மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான சமயம் தான் இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு போட்டியில் வெற்றி காணவும், ஒரு போட்டியில் டிரா செய்யவும் பேருதவியாக ரிஷப் பண்ட் இருந்தார். அதனால் ஜனவரி மாதத்திற்கான சிறந்த விருதை பண்டுக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்தது. இதையடுத்து இந்த மாதத்திற்கான பரிந்துரையில் அஸ்வின் இடம்பிடித்தார்.

தற்போது அவர் இந்த விருதை வென்றதாக ஐசிசி அறிவித்துள்ளது. மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். குறிப்பாக 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பேருதவி செய்திருக்கிறார். இதன்மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. அதேபோல 106 ரன்களையும் சேர்த்துள்ளார். அதன் காரணமாக இந்த விருதை அஸ்வினுக்கு வழங்குவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.