×

கால்பந்து விளையாட்டின் சரித்திரம் மாரடோனா – பத்து விஷயங்கள்! RIP_Maradona

உலகில் பல கோடி பேருக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்க காரணமான அற்புதமான வீரர் மாரடோனா நேற்று மறைந்தார். அவரி இழப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல விளையாட்டுத் துறைக்கே பேரிழப்பு. மாரடோனா பற்றிய பத்து விஷயங்கள். ஒன்று: 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ம் நாள் அர்ஜெண்டினாவில் பிறந்தவர். கியூபா விடுதலைக்குப் போராடிய சேகுவெரா பிறந்த நாடும் அதுதான். இரண்டு: மிகவும் வறுமையில் வாடிய குடும்பத்தில்தான் பிறந்தவர் மாரடோனா. மிகச் சிறுவயதில் உறவினர் பரிசாகத் தந்த கால்பந்தே அவரை அதன்மீது
 

உலகில் பல கோடி பேருக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்க காரணமான அற்புதமான வீரர் மாரடோனா நேற்று மறைந்தார். அவரி இழப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல விளையாட்டுத் துறைக்கே பேரிழப்பு. மாரடோனா பற்றிய பத்து விஷயங்கள்.

ஒன்று: 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ம் நாள் அர்ஜெண்டினாவில் பிறந்தவர். கியூபா விடுதலைக்குப் போராடிய சேகுவெரா பிறந்த நாடும் அதுதான்.

இரண்டு: மிகவும் வறுமையில் வாடிய குடும்பத்தில்தான் பிறந்தவர் மாரடோனா. மிகச் சிறுவயதில் உறவினர் பரிசாகத் தந்த கால்பந்தே அவரை அதன்மீது ஆர்வம் வரச்செய்தது.

PC: wikipedia

மூன்று: 21 ஆண்டுகள் மாரடோனா கால்பந்து விளையாட்டை தொழில்முறையா ஆடியவர். 491 போட்டிகளில் ஆடிய இவர், 295 கோல்களை அடித்தவர்.

நான்கு: 1986 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா உலக கோப்பையை வெல்ல முக்கியக் காரணம் அப்போது கேப்டான இருந்து அணியை திறமையாக வழி நடத்திய மாரடோனாதான்.

PC: wikipedia

ஐந்து: 1990 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா அணிதான் உலக கோப்பையை வெல்லும் என பலரையும் நம்ப வைத்ததும், இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்றதும் மாரடோனாதான். ஆனால், அம்முறை கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆறு: பிஃபா அமைப்பு 2000 ஆம் ஆண்டு நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் நடத்திய வாக்கெடுப்பில் 53.6 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அதாவது வாக்களித்ததில் பாதிக்கும் மேற்பட்டோரின் சாய்ஸ் இவரே.

ஏழு: 60 மீட்டர் தொலைவிலிருந்து மாரடோனா அடித்த கோல் இன்றைய வரைக்கும் சிறப்பான கோல் என்று புகழப்படுகிறது.

PC: wikipedia

எட்டு: கிளாடியா வில்லஃபேன் என்பவரை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். 2003 ஆம் ஆண்டு மனைவி மரணம் அடைந்துவிட்டார்.

ஒன்பது: போதை மருந்து பழக்கத்தால் மாரடோனா கால்பந்து விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

பத்து: கியூப நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பிடலை மாரடோனா எடுத்து தொலைக்காட்சி பேட்டி உலகமே வியந்து பார்த்த ஒன்று. பிடல் இறந்த நவம்பர் 25-ம் தேதியே மாரடோனாவும் இறந்துள்ளார்.