×

’ ஒரு அழகான நாட்டை இப்படி சிதைச்சுட்டாய்ங்களே…’ விராட் கோஹ்லி ஆவேசம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்பட இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலரும் இலங்கை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்புவின் பல்வேறு முக்கிய இடங்களில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோர தாக்குதலில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்பட இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலரும் இலங்கை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இலங்கை தலைநகர் கொழும்புவின் பல்வேறு முக்கிய இடங்களில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோர தாக்குதலில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ள இந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.  அதே போல் பிரபலங்கள் பலர் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் இலங்கை மக்களுக்கும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்பட இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலரும் இலங்கை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Shocked to hear the news coming in from Sri Lanka. My thoughts and prayers go out to everyone affected by this tragedy. #PrayForSriLanka

— Virat Kohli (@imVkohli) April 21, 2019

 

விராட் கோஹ்லி பதிவிட்டுள்ள ட்வீட்டில், “இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Thoughts and prayers with Sri Lanka. Such a beautiful country.

— Rohit Sharma (@ImRo45) April 21, 2019

 

 
https://twitter.com/ImRo45/status/1119839766021672960

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ள ட்வீட்டில் “என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இலங்கை உடன் இருக்கும். என்ன ஒரு அழகான நாடு” என ரோகித் சர்மா கூறியுள்ளார். இவர்களை போல ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற மேலும் பல இந்திய வீரர்களும் இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.