×

இன்றைய போட்டியில் உலக சாதனை படைக்க இருக்கிறார் விராட் கோலி

இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும் பொழுது இந்திய அணியின் விராட் கோலி புதிய உலக சாதனையை படைக்க இருக்கிறார். இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும் பொழுது இந்திய அணியின் விராட் கோலி புதிய உலக சாதனையை படைக்க இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கும் விராட் கோலி, பாகிஸ்தானுடனான போட்டியின் போது, அதிவேகமாக ஒரு நாள்
 

இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும் பொழுது இந்திய அணியின் விராட் கோலி  புதிய உலக சாதனையை படைக்க இருக்கிறார்.

இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும் பொழுது இந்திய அணியின் விராட் கோலி  புதிய உலக சாதனையை படைக்க இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கும் விராட் கோலி, பாகிஸ்தானுடனான போட்டியின் போது, அதிவேகமாக ஒரு நாள் போட்டிகளில் 11 ஆயிரன் ரன்களைக் கடந்த வீரர் என்னும் சச்சினின் சாதனையைத் தகர்த்தார். அந்த சாதனையின் ஈரம் கூட காயாத நிலையில், அடுத்தப் போட்டியிலேயே இன்னொரு சாதனையைத் தகர்க்க இருக்கிறார் விராட்.

இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 104 ரன்கள் அடித்தால், புதியதொரு உலக சாதனை படைத்தவராக மிளிர்வார் விராட் கோலி. வழக்கம் போல, இந்த சாதனையும் தற்போது சச்சின் வசம் தான் இருக்கிறது. அதாவது, இன்றைய போட்டியில், கோலி 104 ரன்களைக் கடக்கும் பொழுது, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்தியர் என்று கொண்டாடப்படுவார். மட்டுமல்லாமல், குறைந்த இன்னிங்ஸில் இந்த 20,000 ரன்களை கடந்த வீரராக விராட் கோலி புதிய உலக சாதனையைப் படைப்பார்.

முதல் இரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா ஆகிய இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 20,000 ரன்களை தங்களது 453ஆவது இன்னிங்ஸ் விளையாடும் பொழுது தான் கடந்தார்கள். இன்றைய போட்டியில் இந்த ரன்களை கோலி கடந்தால், அவர் 416 வது இன்னிங்ஸிலேயே  20ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனையை படைப்பார். விராட் கோலி இதுவரையில், 131 டெஸ்ட் போட்டிகளிலும், 222 ஒருநாள் போட்டிகளிலும் , 62 டி20 போட்டிகளிலும் விளையாடியிருகிறார். மொத்தமாக 415 இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டியில் 11020 ரன்களையும், டெஸ்ட் போட்டியில் 6613 ரன்கள்ளையும் மற்றும் டி20 போட்டிகளில் 2263 ரன்களையும் எடுத்திருக்கிறார்.