×

இன்றைய போட்டியிலும் தோனி இல்லை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இன்று சென்னையில் நடக்கவிருக்கும் 50 ஆவது லீக் சுற்றில் டெல்லி அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. இன்று சென்னையில் நடக்கவிருக்கும் 50 ஆவது லீக் சுற்றில் டெல்லி அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. ஆனால், இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்படன் தோனி விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதற்கு முன் நடந்த மும்பை அணியுடனான போட்டியில், காய்ச்சல் காரணமாக தோனி களமிறங்கவில்லை
 

இன்று சென்னையில் நடக்கவிருக்கும் 50 ஆவது லீக் சுற்றில் டெல்லி அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

 இன்று சென்னையில் நடக்கவிருக்கும் 50 ஆவது லீக் சுற்றில் டெல்லி அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. 

ஆனால், இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்படன் தோனி  விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதற்கு முன் நடந்த மும்பை அணியுடனான போட்டியில், காய்ச்சல் காரணமாக தோனி களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி  இல்லாத காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 156 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.

கடந்த இரண்டு நாட்களாக தோனி  பயிற்சி எதிலும் ஈடுபடவில்லை. அதனால் அவர் இன்றும் களம்  இறங்குவது சந்தேகம் தான். ஜடேஜா நேற்று பயிற்சியில் ஈடுபட்டதால் இன்று அவர் விளையாடுவார் என தெரிகிறது.

இன்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டெல்லி அணியின் ஷிகர் தவான், கேப்டன்  ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா,ரிஷாப் பன்ட், ரபாடா, அமித் மிஸ்ரா, லாமிச்சன்னே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி வலுவாக உள்ளது.

புள்ளிகள் பட்டியலில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறிவிடும். ஆகவே, இன்றைய போட்டி  ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.