×

இங்கிலாந்தின் 1000மாவது டெஸ்ட்…. 1000 ரன்களை கடப்பாரா கோஹ்லி!

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை அடித்துள்ள 13வது இந்திய வீரர் என்ற சாதனையைப் புரிய இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லிக்கு, மேலும் 33 ரன்களே தேவை. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது. இது இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். இங்கிலாந்துக்கு எதிராக 977 ரன்கள் குவித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மேலும் 33
 

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை அடித்துள்ள 13வது இந்திய வீரர் என்ற சாதனையைப் புரிய இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லிக்கு, மேலும் 33 ரன்களே தேவை. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது. இது இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக 977 ரன்கள் குவித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மேலும் 33 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்துள்ள 13வது இந்திய வீரராவார். இங்கிலாந்தில் 5, இந்தியாவில் 9 என 14 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லி 44.40 சராசரியுடன் 977 ரன்கள் குவித்துள்ளார். அதில் இந்தியாவில் நடந்த போட்டிகளில் 70.25 சராசரியுடன் 843 ரன்கள் எடுத்துள்ளார் கோஹ்லி. அதில் 3 சதம், 2 அரைசதமும் அடங்கும். சச்சின் டெண்டுல்கர் 2535 ரன்கள் எடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்தியர்களில் முதலிடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 2,483, ராகுல் டிராவிட் 1,950, குண்டப்பா விஸ்வநாத் 1,880 ரன்கள், திலீப் வெங்சர்கார் 1,589, கபில் தேவ் 1,355 ரன்கள் எடுத்துள்ளனர். முகமது அசாருதீன் 1,278 ரன்கள், விஜய் மஞ்சரேக்கர் 1181, மகேந்திர சிங் தோனி 1,157, பரூக் இன்ஜினியர் 1,113, சத்தேஸ்வர் புஜாரா 1,061 ரன்கள், ரவி சாஸ்திரி 1026 ரன்கள் எடுத்துள்ளனர். தோனி தலைமையில் 2014ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் கோஹ்லி, 10 இன்னிங்ஸ்களில் 13.40 சராசரியுடன் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த முறை இங்கிலாந்தில் தனது சராசரியை அவர் உயர்த்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.