×

’நான் பார்த்ததிலேயே பெஸ்ட் கேட்ச்’ மிதாலி ராஜ் புகழ்வது யாரை?

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் மிதாலி ராஜ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண் கிரிக்கெட்டரின் கேட்சை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். அவர் யார்? இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டின் ஸ்டார் பவுலர் நட் ஸிவேர் (Nat Sciver). இவர் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டில் முதல் ஹாட் ட்ரிக் எடுத்த பவுலர் (தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது) 28 வயதாகும் Nat Sciver பிறந்தது ஜப்பானில். வசிப்பதும் விளையாடுவதும் இங்கிலாந்துக்காக. ஒருநாள் போட்டியில்
 

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் மிதாலி ராஜ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண் கிரிக்கெட்டரின் கேட்சை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். அவர் யார்?

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டின் ஸ்டார் பவுலர் நட் ஸிவேர் (Nat Sciver). இவர் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டில் முதல் ஹாட் ட்ரிக் எடுத்த பவுலர் (தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது)

28 வயதாகும் Nat Sciver பிறந்தது ஜப்பானில். வசிப்பதும் விளையாடுவதும் இங்கிலாந்துக்காக. ஒருநாள் போட்டியில் 56 மேட்ச் ஆடி, 1536 ரன்களும் டி20 போட்டிகளில் 56 மேட்ச்களில் 1031 ரன்களும் குவித்தவர். அதேபோல, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகலில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

Nat Sciver ஆஸ்திரேலியாவில் நடைபெறும் வுமன்ஸ் பிக் பாஷ் லீக்கில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அந்தத் தொடரில் நவம்பர் 14-ம் தேதியன்று ஷிட்னி தண்டர் அணிக்கும், மெல்போர்ன் ஸ்டார்ஸ்க்கும் நடந்த போட்டியில், ரேச்சல் அடித்த பந்தை பாய்ந்து பிடித்தார் Nat Sciver. அபாரமான கேட்ச் அது. தரையிலிருந்து ஓரடிக்கும் மேல் எம்பி பிடித்த கேட்ச் அது. ரேச்சல் பந்துகளை பவுண்ட்ரிக்கு விளாசிக்கொண்டிருந்த நேரத்தில் Nat Sciver பிடித்த கேட்ச் அணியின் வெற்றிக்கு ரொம்பவே முக்கியமானதாக இருந்தது.

இந்தக் கேட்ச் வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ், ‘தான் பார்த்த மிகச் சிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று’ என்று புகழ்ந்துள்ளார்.

அன்றைய போட்டியில் பேட்டிங்கிலும் Nat Sciver அசத்தினார். ஆட்டம் இழக்காமல் 31 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்ட்ரிகள் அடங்கும்.