×

வெல்கம் பேக் ’தல’ தோனி – மீண்டும் களம் இறங்கும் சென்னை சிங்கம் #thala

’தோனி’ – இந்திய கிரிக்கெட்டில் மட்டுல்ல உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் முறை எழுதப்படப்போகும் பெயர்களில் முதன்மையானது. மஹேந்திர சிங் தோனி கேப்டனாகப் பொறுப்பேற்கும் முன்பும் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சவுரங் கங்குலி, ராகுல் டிராவிட், வீரெந்திர சேவாக் ஆகிய ஜாம்புவான்கள் இருந்தனர். ஆனால், ஒவ்வொருவரும் தங்கள் ஆட்டங்களில் சிறப்பாக வெளிப்பட்டர்களே தவிர, அணிக்குப் பெரும் வெற்றியைத் தேடி தர முடியவில்லை. அதனால், இந்திய கிரிக்கெட் அணி ஆவரேஜ் எனும் நிலையிலேயே இருந்தது. தோனி அதற்கு
 

’தோனி’ – இந்திய கிரிக்கெட்டில் மட்டுல்ல உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் முறை எழுதப்படப்போகும் பெயர்களில் முதன்மையானது.

மஹேந்திர சிங் தோனி கேப்டனாகப் பொறுப்பேற்கும் முன்பும் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சவுரங் கங்குலி, ராகுல் டிராவிட், வீரெந்திர சேவாக் ஆகிய ஜாம்புவான்கள் இருந்தனர். ஆனால், ஒவ்வொருவரும் தங்கள் ஆட்டங்களில் சிறப்பாக வெளிப்பட்டர்களே தவிர, அணிக்குப் பெரும் வெற்றியைத் தேடி தர முடியவில்லை. அதனால், இந்திய கிரிக்கெட் அணி ஆவரேஜ் எனும் நிலையிலேயே இருந்தது.

. (Photo by Satish Bate/Hindustan Times via Getty Images)

தோனி அதற்கு கேப்டனான பிறகு புதிய துள்ளலோடு வெற்றி பாதையில் நடக்கத் தொடங்கியது இந்திய அணி.

இப்பவும் ஐசிசியின் ரேங்கிலில் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் இந்தியாவின் முன்னாள் வீரர் கபில்தேவ். அவர் தலைமையிலான இந்திய அணி ‘ஒருநாள் உலககோப்பை’ யை வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இது நடந்தது 198 ஆம் ஆண்டில். அதன்பிறகு அசாருதீன், கங்குலி, டிராவிட் உள்ளிட்ட பல திறமையான வீரர்களின் தலைமையில் இந்திய அணி உலககோப்பை தொடரில் விளையாடியும் கோப்பையை வசப்படுத்த முடியவில்லை.

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்.

டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான். இனி எத்தனை அணி கோப்பையை வென்றாலும் முதல் அணியின் தலைவன் எனும் பெயர் தோனிக்கே.

இந்திய அணிக்காக இத்தனை பெருமைகளைச் சேர்த்த தோனி, இந்திய அணிக்குள் மெல்ல மெல்ல ஒதுக்கப்பட்டார். பல போட்டித் தொடர்களில் அவர் பெயர் இடம்பெற வில்லை. அவருக்கு ஓய்வு என்று சொல்லப்பட்டது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தோனியின் ஓய்வு பற்றியே அதிகம் பேசப்பட்டது. அதைக் கிண்டல் செய்து தோனியே ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் . ஒரு கட்டத்தில் க்ளைமேக்ஸ் வந்துதானே ஆகும். அப்படித்தான் ஆகஸ்ட் மாதம் 150ம் தேதி மாலை 17:29 மணிக்கு ஓய்வை அறிவித்தார் தோனி. 

அது ஏன் 17:29 மணி என்று கேள்வி எழுந்தது… உலகின் தென்பகுதி நாடுகளில் பெரும்பாலும் சூர்ய அஸ்தமன நேரம் இதுவே. மேலும், 1929 என்று ஏன் குறிப்பிட்டார் என்றால், இப்படிக் குறிப்பிடுவது ராணுவ நடைமுறை. தோனி இந்திய ராணுவத்தின் மீது மிகப் பெரிய மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பதால் இப்படிக் குறிப்பிட்டார் என்றும் கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி எந்த போட்டியிலும் இல்லை. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மாலை ஐபிஎல் போட்டியில் ஆட களத்தில் இறங்குகிறார் தோனி.

ஐபிஎல் போட்டியிலும் அசத்தலான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டன் தோனியே. ஒரு டீம்க்கு இத்தனை ஆண்டுகள் ஒரே கேப்டன் இருப்பதும் தோனிதான். மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தந்திருக்கிறார்.

இன்று மும்பை இண்டியன்ஸ் அணியோடு மோதவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி களத்தில் இறங்குவதைக் காணவே அவரின் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். அணியின் வெற்றி தோல்வி எல்லாம் அடுத்த கட்டம்தான்.

தோனியின் கம்பேக்கை கொண்டாடும் விதமாக, அவர் ஓய்வை அறிவித்த 1729 மணியைச் சொல்லி மீண்டும் 17:30 களம் இறங்குகிறார் என்றும் ‘Thala’ என்றும் ட்விட்டரில் ட்ரென்டாக்கி வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.

இன்றைய போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கி வருகிறது இந்த ட்விட்டர் ட்ரெண்டிங்.