ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதல்
Apr 18, 2025, 09:45 IST
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 33 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 162 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை அணி அந்த இலக்கை 18.1 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று விளையாடுவதால் போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.