×

’200 ரன்களை இவரால் நிச்சயம் அடிக்க முடியும்’ டேவிட் ஹஸ்ஸி சொல்வது யாரை?

ஐபிஎல் 2020 போட்டித் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற வில்லை. காரணம் கொரோனா நோய்த் தொற்று பரவல்தான். அதற்குப் பதிலாக ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் உற்சாகமாகத் தொடங்க விருக்கிறது. ஐபிஎல் போட்டியினை இம்முறை அதிகளவில் டிவி மூலம் கண்டுகளிப்பார்கள் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் இந்த சாதனையை அந்த
 

ஐபிஎல் 2020 போட்டித் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற வில்லை. காரணம் கொரோனா நோய்த் தொற்று பரவல்தான். அதற்குப் பதிலாக ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் உற்சாகமாகத் தொடங்க விருக்கிறது.

ஐபிஎல் போட்டியினை இம்முறை அதிகளவில் டிவி மூலம் கண்டுகளிப்பார்கள் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் இந்த சாதனையை அந்த அணி நிகழ்த்தியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. தற்போதைய கேப்டன் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸி. அவர் தனது அணியைப் பற்றி பெருமையுடன் கூறிவருகிறார்.

’கொல்கத்தா அணியின் அனுபவமும் திறமையும் வாய்ந்த தினேஷ் கார்த்திக், குல்தீப், சுனில் நரேன் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோல பேன்டன் மைதானத்தில் ஆடுவதைக் காண காத்திருக்கிறேன்’ என்றிருக்கிறார் டேவிட் ஹஸ்ஸி.

மற்றொரு பேட்டியில், ‘ஆண்ரே ரஸல் முக்கியமான வீரர். அவர் மூன்றாம் இடத்தில் இறங்கினால், 200 ரன்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆன்ரே ரஸல் இதுவரை 64 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1400 ரன்களை விளாசியிருக்கிறார். பெரும்பாலும் மிடில் ஆர்டரில் இவர் இறக்கி விடப்படுவதால் அணியின் வெற்றியை மையப்படுத்தே ஆட வேண்டியிருக்கும். பல ஆட்டங்களில் நாட் அவுட் பேட்ஸ் மேனாகவே இருப்பார். டேவிட் ஹஸ்ஸி சொல்வதுபோல மூன்றாம் இடத்தில் ரஸல் இறக்கப்பட்டால் 200 ரன்கள் சாத்தியமாகக்கூடும்.