×

’கிறிஸ் கெயில் ஆடாததற்கு இதுவே காரணம்’ பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது. இதுவரையிலான 6 போட்டிகளில் 5 -ல் தோல்வியைத் தழுவியிருக்கிறது பஞ்சாப் அணி. பேட்டிங்கில் ராகுல், மயங் அகர்வால், பூரண் ஆகியோரைத் தவிர வேறு யாரும் நிலைத்து ஆடுவதில்லை. நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியோடு மோதி பரிதாபமாகத் தோற்றது. சென்ற ஆண்டில் ஓப்பனிங் இறங்கிய கிறிஸ் கெயிலை ஏன் இன்னமும் பயன்படுத்த வில்லை என்பது கடும் விமர்சனத்தை கிளப்பியது. சென்ற ஆண்டில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் தோற்றாலும்
 

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது. இதுவரையிலான 6 போட்டிகளில் 5 -ல் தோல்வியைத் தழுவியிருக்கிறது பஞ்சாப் அணி. பேட்டிங்கில் ராகுல், மயங் அகர்வால், பூரண் ஆகியோரைத் தவிர வேறு யாரும் நிலைத்து ஆடுவதில்லை. நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியோடு மோதி பரிதாபமாகத் தோற்றது.

சென்ற ஆண்டில் ஓப்பனிங் இறங்கிய கிறிஸ் கெயிலை ஏன் இன்னமும் பயன்படுத்த வில்லை என்பது கடும் விமர்சனத்தை கிளப்பியது. சென்ற ஆண்டில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் தோற்றாலும் கெயில் 64 பந்துகளில் 5 சிக்ஸர், 10பவுண்ட்ரிகளோடு 99 ரன்கள் அடித்து நாட் அவுட்டனதை மறக்க முடியுமா?

ஆனால், நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயிலை இறங்காதது ஏன் என்று பஞ்சாப் அணியின் பயிற்சியாளும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட்டருமான அனில் கும்ப்ளே தெரிக்கையில், “நாங்கள் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலை ஆட வைக்க நினைத்தோம். ஆனால், அவருக்கு ஃபுட் பாய்சனாகி விட்டதால், அவரால் ஆட முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.