×

ஒருநாள் டாப் 10 பட்டியலில் முதல் இருவர் இந்திய வீரர்களே #ICC_Ranking

உலகளவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது அதில் ஆடும் வீரர்களின் ஆட்டத்திறனை அடிப்படையாகக் கொண்டு ஐசிசி பட்டியல் வெளியிடும். தற்போது அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பட்டியலில் இந்திய வீரர்கள் பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். அது குறித்து பார்ப்போம். ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன் பட்டியல்: முதல் இடத்தில் 871 பாயிண்ட்டுகள் எடுத்து விராட் கோலியும் 855 பாயிண்ட் எடுத்த ரோஹித் ஷர்மா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். பாகிஸ்தானில் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் நான்காம் இடத்தில் நியுசிலாந்தின் ரோஸ் டெய்லர், ஐந்தாம் இடத்தில்
 

உலகளவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது அதில் ஆடும் வீரர்களின் ஆட்டத்திறனை அடிப்படையாகக் கொண்டு ஐசிசி பட்டியல் வெளியிடும். தற்போது அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பட்டியலில் இந்திய வீரர்கள் பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். அது குறித்து பார்ப்போம்.

ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன் பட்டியல்: முதல் இடத்தில் 871 பாயிண்ட்டுகள் எடுத்து விராட் கோலியும் 855 பாயிண்ட் எடுத்த ரோஹித் ஷர்மா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் நான்காம் இடத்தில் நியுசிலாந்தின் ரோஸ் டெய்லர், ஐந்தாம் இடத்தில் சவுத் ஆப்பிரிக்காவின் பிளசிஸிஸ், ஆறாம் இடத்தில் நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஏழாம் இடத்தில் ஆரோன் பின்ச், எட்டாம் இடத்தில் டேவிட் வார்னர், ஒன்பதாம் இடத்தில் சவுத் ஆப்பிரிக்காவின் டி காக், 10 இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் ஷிகர் தவான் 16-ம் இடத்திலும் எல்.ராகுல் 34-ம் இடத்திலும், கேதர் ஜாதவ் 39 வது இடத்திலும் ஸ்ரேயாஸ் ஐயர் 61 இடத்திலும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  

ஒருநாள் போட்டிகளின் பவுலிங் பட்டியலில் 722 பாயிண்ட் பெற்று நியுசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திலும் 719 பாயிண்ட் எடுத்து இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ராவும் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவின் சோஹல் 15-வது இடமும், 19 வது இடத்தில் குல்தீப் யாதவும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஒருநாள் போட்டியின் ஆல் ரவுண்டர் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகம்மது நபி முதல் இடத்திலும் இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் இரண்டாம் இடத்தில் இடம்பிடித்துள்ளனர். முதல் பத்து இடத்தில் பிடித்த ஒரே இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாதான் எட்டாம் இடம் அவருக்கு.