×

சற்று முன் வந்த ஷாக் நியூஸ்... கங்குலி மகள் உட்பட நால்வருக்கு கொரோனா -  பீதியில் கொல்கத்தா!

 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இரண்டாம் அலையின் ஆரம்பத்தில் என்ன வேகத்தில் கொரோனா பரவியதோ அதை விட அதிவேகமாக பரவி வருகிறது. அதற்குக் காரணம் மின்னல் வேக ஒமைக்ரான் பரவல் தான். அதனுடன் டெல்டா வேரியன்டும் சேர்ந்துகொண்டதால் பாதிப்பு எண்ணிக்கை மலைக்க வைக்க கூடிய அளவிற்கு அதிகரித்துள்ளது. இரண்டாம் அலையின்போது சினிமா நடிகர்கள், கிரிக்கெட்டர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பிரபலமான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.

தற்போது அதேபோல பிரபலமான நபர்களுக்கு கொரோனா என்ற செய்தி அடிக்கடி வட்டமடிக்கின்றன. கடந்த வாரம் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு டோஸ் போட்டுக்கொண்டும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இதயத்தில் கோளாறு இருந்ததால், மிக தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதன்மூலம் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கங்குலி. வீட்டிற்குச் சென்றாலும் அவரை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுத்தியிருந்தனர். இச்சூழலில் கங்குலியின் மகள் சானா, கங்குலியின் மாமா தேபாஷிஷ், அவரது உறவினர்கள் ஷுவ்ரோதீப், ஜாஸ்மின் ஆகிய நால்வருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நால்வரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.