33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர் சரன்ஷ் ஜெயின்!
ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக 33 வயதான ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஜூன் மாத, ஆப்கானிஸ்தான் டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டு அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சாய் சுதர்ஷன்*, துருவ் ஜுரேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா*, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின்.
இந்தியா 9 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடர் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலே என்ற இடத்திலும் இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 23 – கொழும்புவிலும் நடைபெறவுள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் துபே ஆகியோர் அணியில் இல்லை.