சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புஜாரா ஓய்வு
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான சத்தேஸ்வர் புஜாரா, இன்று கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு என அறிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் ஓய்வுபெற்ற பின், அவரது இடத்தை நிரப்பும் கடினப் பொறுப்புடன் அணியில் களமிறங்கிய புஜாரா, தனது தனித்துவமான விளையாட்டு நடைமுறையால் இந்திய அணியின் "புதிய சுவர்" என அழைக்கப்பட்டார். உறுதியான மனநிலை, அளவற்ற பொறுமை ஆகியவற்றின் மூலம் பல சிக்கலான சூழ்நிலைகளில் இந்திய அணியை பாதுகாப்பாக முன்னேற்றி வெற்றிக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தேசிய கீதம் பாடிக்கொண்டு, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பது, அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் அவர்கள் சொல்வது போல், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும்,மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
புஜாரா இதுவரை 103 டெஸ்ட் போட்டியில் 7195 எண்கள் எடுத்துள்ளார். 43.60 என்ற சராசரி , 19 சதங்கள், 35 அரை-சதங்கள் ஆகியவைvஅடங்கும்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடர்களில் (2018-19, 2020-21) இந்தியா வெற்றி பெற்றபோது, அந்த வெற்றியின் முதுகெலும்பாக புஜாரா விளங்கினார். பந்துக்கு பந்து எதிர்த்து, உடலை அர்ப்பணித்து, எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் சக்தியைச் சுருக்கிய அவரது தன்னலமற்ற ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் நினைவில் கொள்ளுவார்கள். கடைசியாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு இந்தியனை இளம் வீரர்களை எதிர்நோக்கியதால் , கடந்த சில ஆண்டுகளாக புஜாராவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. மேலும், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த புஜாரா, சுயமாகவே தனது ஓய்வை அறிவித்துள்ளார்.