×

பி.வி.சிந்து விளையாட்டிலிருந்து ஓய்வா? அதிர்ச்சி ட்வீட்

இந்திய பேட்மின்டன் விளையாட்டின் முகமாக விளங்குபவர் பி.வி.சிந்து. இந்தியாவுக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடி வெற்றியைத் தேடித் தந்தவர். பேட்மின்டன் உலகசாம்பியன் தொடரில் சென்ற ஆண்டு தங்கம் வென்றவர் சிந்து. அதற்கு முந்தைய வருடங்களில் வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களைக் குவித்து வந்தவர். அதேபோல காமன்வெல்த் போட்டியில் கலப்பு இரட்டையரில் 2018 ஆண்டு தங்கமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியும் தட்டி வந்தவர். பி.வி. சிந்துவின் சாதனைப் பட்டியலைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். உச்சபட்சமாக 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்
 

இந்திய பேட்மின்டன் விளையாட்டின் முகமாக விளங்குபவர் பி.வி.சிந்து. இந்தியாவுக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடி வெற்றியைத் தேடித் தந்தவர்.

பேட்மின்டன் உலகசாம்பியன் தொடரில் சென்ற ஆண்டு தங்கம் வென்றவர் சிந்து. அதற்கு முந்தைய வருடங்களில் வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களைக் குவித்து வந்தவர். அதேபோல காமன்வெல்த் போட்டியில் கலப்பு இரட்டையரில் 2018 ஆண்டு தங்கமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியும் தட்டி வந்தவர்.

பி.வி. சிந்துவின் சாதனைப் பட்டியலைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். உச்சபட்சமாக 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.

25 வயதே ஆன, பி.வி.சிந்து பேட்மின்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு எனும் செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. அதிர்ச்சியோடு பலரும் பி.வி.சிந்துவின் ட்விட்டர் பக்கம் போனால்… அவர் டென்மார்க் பேட்மின்டன் தொடரில் கொரோனா அச்சம் காரணமாகப் பங்கேற்க முடியவில்லை என்பதையே அப்படி விளையாட்டாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா அச்சத்தால் பல தொடர்களிலிருந்து பிவி சிந்து விலகியிருந்தார். இந்த எண்ணத்திலிருந்துதான் ஓய்வுபெற போகிறேன். அதனால், டென்மார் தொடரே நான் விளையாட மறுக்கும் கடைசி போட்டி. நிச்சயம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடுவேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிவி சிந்துவின் வித்தியாசமான இந்த ட்விட்டால் அவரின் ரசிகர்கள் சில நிமிடங்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்பதே உணை.