×

ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகல்

 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார் . கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேற விரும்புவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த திடீர் விலகல், ராஜஸ்தான் அணிக்குள் பெரும் குழப்பம் நிலவுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக, டிராவிட் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு விரிவான பொறுப்பை ஏற்கும்படி டிராவிட்டிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட், செப்டம்பர் 6, 2024 அன்று மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது இரண்டாவது வருகை ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு வந்துள்ளது. பட்லர் ,சாகல்,அஸ்வின, போல்ட் போன்ற முன்னணி வீரர்களை தக்க வைக்காமல் விட்டதும். ஹெட்மயர் போன்ற வீரர்களை தக்க வைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அது மட்டுமல்லாமல் 2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதுபோக சஞ்சு சாம்சங் அணியிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதும் அடுத்த கேப்டனாக ஜெய்ஸ்வால் அல்லது ரியான் பராக் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நேரத்தில் ராகுல் டிராவிட் அணியிலிருந்து வெளியேறுவது ஐபில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.