×

’சுரேஷ் ரெய்னா அதிக ரன் குவிக்காததற்கு இதுவே காரணம்’ ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களம் இறங்கியவர் சுரேஷ் ரெய்னா. அப்போதைய அணியின் சூழலுக்கு ஏற்ப, அதிரடி ஆட்டமா, விக்கெட்டைப் பாதுகாப்பதா என்பதை முடிவு செய்து ஆடியவர். ஆகஸ்ட் 15-ம் தேதி மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவித்தார். அவரோடு சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தோனியின் அறிவிப்பு பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், சுரேஷ் ரெய்னா ஓய்வு நிஜமாகவே பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏனெனில், அதிரடி ரன் குவிப்பு,
 

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களம் இறங்கியவர் சுரேஷ் ரெய்னா. அப்போதைய அணியின் சூழலுக்கு ஏற்ப, அதிரடி ஆட்டமா, விக்கெட்டைப் பாதுகாப்பதா என்பதை முடிவு செய்து ஆடியவர்.

ஆகஸ்ட் 15-ம் தேதி மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவித்தார். அவரோடு சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

தோனியின் அறிவிப்பு பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், சுரேஷ் ரெய்னா ஓய்வு நிஜமாகவே பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

ஏனெனில், அதிரடி ரன் குவிப்பு, சமயோசித பவுலிங், அட்டகாசமான ஃபீல்ட்டிங் என பன்முக ஆற்றல் கொண்டவர் சுரேஷ் ரெய்னா. சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6006 ரன்களை எடுத்திருக்கிறார். இதில் 5 சதங்களும் அடக்கம்.

டி20 போட்டிகளில் 78 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம் உள்பட 1604 ரன்கள் எடுத்திருக்கிறார். ஐபில் போட்டிகளில் 193 ஆட்டங்களில் ஆடி, 5368 ரன்கள் குவித்திருக்கிறார். அதில் ஒரு சதமும் உண்டு. 194 சிக்ஸர் அடித்திருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா குறித்து முன்னாள் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் பேசுகையில், ‘குறைந்த ஓவர் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா அசாத்திய திறமை கொண்டவர். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் அடித்தார். அதற்குப் பின் அந்த திறமையை வளர்த்துக்கொள்ள வில்லை.

பீல்டிங் செய்ய சிரமமான இடங்களிலும் சிறப்பாக பீல்டிங் செய்தவர் ரெய்னா. திறமை மிக்க பேட்ஸ்மேன். பல மேட்ச்களில் பின் வரிசையில் அவர் இறங்க வேண்டியிருந்ததால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை.

ஒருவேளை முன் வரிசையில் அவர் களமிறக்கப் பட்டிருந்தால் நிச்சயம் அதிக ரன்கள் குவித்திருக்கக்கூடும். அதற்கு சாட்சி ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடும் விதமே’ என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.