×

ஜப்பான் வீராங்கனையிடம் மிக மோசமாக தோற்றார் பி.வி. சிந்து!

 

இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி நகரில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து கலந்துகொண்டார். காலிறுதி போட்டியில் துருக்கியைச் சேர்ந்த நெஸ்லிஹான் யிகிட் என்ற வீராங்கனையை 21-13, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அந்த வகையில் இன்று அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதினார்.

ஆரம்பம் முதலே வெறித்தனமாக விளையாடிய அகானே சிந்துவை நிலைகுலைய செய்தார். 32 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்துவை 21-13, 21-9 என்ற நேர் செட்களில் மிக எளிதாக தோற்கடித்தார் ஜப்பான் வீராங்கனை அகானே. கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் போட்டியிலும் அரையிறுதிவரை வந்து சிந்து தோல்வி அடைந்துள்ளார்.

அகானேவுடன் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ள சிந்து 12 முறை வெற்றி கண்டிருக்கிறார். 7  முறை தோல்வியடைந்திருக்கிறார். ஆனால் இன்றைய போட்டியில் மிக மோசமாகவே சிந்து தோற்றிருக்கிறார். இருப்பினும் இந்திய ஆடவர் பேட்மிண்டன் வீரர் கிதாமி ஸ்ரீகாந்த்தும் காலியிறுதியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் டென்மார்க்கின் ஆண்டெர்ஸ் ஆண்டன்செனுடன் ஸ்ரீகாந்த் மோதுகிறார். இப்போது அனைவரது கவனமும் ஸ்ரீகாந்த் பக்கம் திரும்பியுள்ளது.