×

’இரண்டு அணிக்கும் வெற்றி இல்லை’ – கேரளா vs north east united மோதல்

ISL கால்பந்து போட்டிகளின் பரபரப்பு ரசிகர்ளையும் தொற்றிக்கொண்டது. அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்தக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் திளைப்பார்கள். நேற்றும் அட்டகாசமான போட்டி நடந்தது. நேற்றைய போட்டியில் கேரளா அணியை எதிர்கொண்டது north east united fc. பாயிண்ட் டேபிளிள் north east united fc அணி முதல் இடத்திலும் கோவா அணி பத்தாம் இடத்திலும் இருந்தன. தான் ஆடிய முதல் போட்டியில் அசத்தலான வெற்றியைத் தட்டிச்சென்றது northeast united fc அணி. அதனால், இம்முறை அந்த
 

ISL கால்பந்து போட்டிகளின் பரபரப்பு ரசிகர்ளையும் தொற்றிக்கொண்டது. அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்தக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் திளைப்பார்கள். நேற்றும் அட்டகாசமான போட்டி நடந்தது.

நேற்றைய போட்டியில் கேரளா அணியை எதிர்கொண்டது north east united fc. பாயிண்ட் டேபிளிள் north east united fc அணி முதல் இடத்திலும் கோவா அணி பத்தாம் இடத்திலும் இருந்தன.

தான் ஆடிய முதல் போட்டியில் அசத்தலான வெற்றியைத் தட்டிச்சென்றது northeast united fc அணி. அதனால், இம்முறை அந்த நம்பிக்கையோடு ஆடியது.

கேரளா அணியில் பல மாற்றங்கள் நடந்திருப்பதால் அது வெற்றி பெரும் எனப் பலரும் கணிந்த்த நிலையில், கேரளா அணியோ முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது. அதனால், இம்முறை வெற்றிக்கு கடுமையாகப் போராடியது என்பதில் சந்தேகமில்லை.

இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டன. வெற்றிக்கான மூன்றாம் கோலைப் போட இரு அணிகளாலும் முடியவில்லை. ஆட்ட நேரம் முடிவடையும் வரை இதே நிலை நீடித்தது. அதனால் போட்டி யாருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை என்பதாக சமனில் முடிவடைந்தது.

போட்டி சமனில் முடிவடைந்ததால் north east united fc அணிக்கு ஒரு பாயிண்ட் கிடைக்க, தன் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.