×

நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் திடீர் விலகல்!

 

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணியுடனான போட்டிகளில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியுற்றது. அந்த தோல்விகள் தான் இந்தியா தொடரை விட்டு வெளியேறவும் காரணமாகிவிட்டன.இருப்பினும் இந்தத் தொடர் முடிந்தவுடனே நியூஸிலாந்துடன் 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. நியூஸிலாந்தை பழிக்குப் பழி தீர்க்க இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது. நியூஸிலாந்தோ, உலகக்கோப்பையைத் தான் நழுவவிட்டோம், இந்த கோப்பையை வென்றுவிட வேண்டும் என வரிந்துகட்டி இந்தியாவிற்கு வந்துவிட்டது. 

இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியதால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்ததால், டிராவிட் புதிய பயிற்சியாளரானார். கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அணியில் கோலி, பும்ரா, ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருண் சக்ரவர்த்தி, பாண்டியா, ஷர்துல் தாக்கூர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷல் படேல், வெங்கடேஸ் ஐயர் ஆகியோர் அறிமுக வீரர்களாகக் களமிறங்கவிருக்கின்றனர்.

இச்சூழலில் நியூஸிலாந்து அணியும் வீரர்களை அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் வில்லியம்சன் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இருப்பினும் டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. வில்லியம்சனுக்கு பதில் டிம் சவுத்தி கேப்டனாக செயல்படுவார். அதேபோல பந்துவீச்சாளர் பெர்குசன் பிளேயிங் 11-இல் இடம்பெறுவார் என சொல்லப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் இல்லை.  கப்தில், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், போல்ட் போன்றவர்கள் அணியிம் இடம்பெற்றுள்ளனர். நாளை முதல் டி20 தொடங்குகிறது.

நியூஸிலாந்து அணி விவரம்:

டோட் ஆஸ்டில், ட்ரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் சவுத்தி (கேப்டன்)