×

ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணி அபார வெற்றி – LPL அப்டேட்

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் போலவே இலங்கையில் கடந்த எட்டாண்டுகளாக எல்.பி.எல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். எல்.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கொழும்பு அணியோடு மோதியது கண்டி. இந்தப் போட்டி சூப்பர் வரை சென்றது. இறுதியாக கொழும்பு இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. நேற்று எல்.பி.எல் தொடரின் இரண்டாம் போட்டி நடைபெற்றது. இதில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியோடு
 

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் போலவே இலங்கையில் கடந்த எட்டாண்டுகளாக எல்.பி.எல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

எல்.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கொழும்பு அணியோடு மோதியது கண்டி. இந்தப் போட்டி சூப்பர் வரை சென்றது. இறுதியாக கொழும்பு இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்று எல்.பி.எல் தொடரின் இரண்டாம் போட்டி நடைபெற்றது. இதில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியோடு மோதியது ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணி.

பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கோல் கிளாடியேட்டர்ஸ் அணியில் ஆடினார். தனிமைப்படுத்தப்படாமல் போட்டியில் ஆடியது சர்ச்சையாக ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்கிறது.

முதலில் பேட்டிங் ஆடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி நிதானமாகவே ஆடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 175 ரன்கள் அடித்தது. அப்ரிடி 28 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார்.

அடுத்து களம் இறங்கியது ஜாப்னா அணி. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 176 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் பெர்னாண்டோ 92 ரன்களை விளாசினார். தொடக்கத்தில் ஜாப்னா அணி தோற்றுவிடும் என்றே தோன்றியது பின், சுதாரித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்,