×

சைபர் தாக்குதலால் ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் சிக்கலா?

உலகில் எண்ணற்ற வீரர்கள் கலந்துகொள்ள ஆவலோடு பயிற்சி எடுத்துக்கொள்வது ஒலிம்பிக் போட்டிக்காகத்தான். வெல்கிறோமோ இல்லையோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாவதே பெரிய இலக்காகக் கொண்டிருப்பவர்களும் உண்டு. வழக்கமாக இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உலகம் முழுவதும் சுழற்றி அடித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, 2021 ஆம் ஆண்டுக்கு ஒலிம்பிக் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை ஜப்பான் நாட்டில்
 

உலகில் எண்ணற்ற வீரர்கள் கலந்துகொள்ள ஆவலோடு பயிற்சி எடுத்துக்கொள்வது ஒலிம்பிக் போட்டிக்காகத்தான். வெல்கிறோமோ இல்லையோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாவதே பெரிய இலக்காகக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

வழக்கமாக இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உலகம் முழுவதும் சுழற்றி அடித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, 2021 ஆம் ஆண்டுக்கு ஒலிம்பிக் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

PC: olympic.org

அடுத்த வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காகக் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசும் ஒலிம்பிக் குழுவும் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில்கூட ஒலிம்பிக்கில் தேர்வாகும் நிலையில் உள்ள வீரர்களுக்கு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளோடு பயிற்சி எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

PC: olympic.org

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விடாமல் செய்ய ரஷ்யா சைபர் தாக்குதலை நடத்தவிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனால், ஒலிம்பிக் போட்டி நடக்குமா… தடை படுமா என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்தது.

ஜப்பான் நாட்டின் தரப்பில், சைபர் தாக்குதல் எவ்விதத்திலும் பிரச்சனை ஏற்படாது. நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும்’ என்று உறுதியாகக் கூறப்பட்டிருக்கிறது.