பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீவு ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
பாஸ் என்ற பெங்களூரு அணியின் கேப்டன் படிதர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சுமாரான துவக்கம் தந்தனர். பிரயான்ஸ் ஆர்யா 22 ரன்களிலும் பிரப்சிம்ரன் சிங் 33 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட் களையும் பெங்களூரில் பந்துவீச்சாளர் குர்ணல் பாண்டியா வீழ்த்தி ஆட்டத்தை பெங்களூரின் பக்கம் திருப்பினார். இதன்பிறகு சீரான விக்கெட்டுகள் விழுந்தாலும் பஞ்சாப் அணியாள் ரன்களை குவிக்க முடியவில்லை. இறுதிக்கட்டத்தில் புவனேஸ்வர் குமார் மற்றும் ஹாசில்வுட் பஞ்சாப் அணியின் ரன்களை கட்டுப்படுத்தினர்.20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
158 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் ஆரம்பத்திலேயே சால்ட் விக்கெட்டை இழந்தது. இதன்பிறகு விராட் கோலி மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து பெங்களூரு அணிக்கு வெற்றி கூட்டணியை அமைத்தனர்.103 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் படிக்கல் 61 ரன்கள் குவித்த ஆட்டம் இழந்தார். 18.5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ஐந்து வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.