×

ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 10வது தங்கப்பதக்கம்!

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் நீரஜ் சோப்ரா இன்று வென்றது இந்தியாவின் 10வது தங்க பதக்கம் வென்றுள்ளது. சுதந்திர இந்தியாவில் தனிநபரில் இரண்டாவது தங்கம் வென்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெறுகிறார். முன்னதாக கடந்த 2008 அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றிருந்தார். இதேபோல் 1928,1932,1936,1952,1956,1964,1980 ஆகிய ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடதக்கது. இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில், “நம்பவே முடியாத ஒன்று நடந்ததுபோல உணர்கிறேன்,
 

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் நீரஜ் சோப்ரா இன்று வென்றது இந்தியாவின் 10வது தங்க பதக்கம் வென்றுள்ளது. சுதந்திர இந்தியாவில் தனிநபரில் இரண்டாவது தங்கம் வென்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெறுகிறார். முன்னதாக கடந்த 2008 அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றிருந்தார். இதேபோல் 1928,1932,1936,1952,1956,1964,1980 ஆகிய ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடதக்கது.

இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில், “நம்பவே முடியாத ஒன்று நடந்ததுபோல உணர்கிறேன், எனக்கும், நாட்டுக்கும் பெருமிதமான தருணம் இது” எனக் கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகையை ஹரியானா அரசு அறிவித்துள்ளது. கிரேடு ஒன்றில் அரசு பணி வழங்கப்படும் எனவும் ஹரியான அரசு அறிவித்துள்ளது.