×

’தோனிக்கு ஏ கிரேடு வழங்கக்கூடாதுன்னு நான்தான் சொன்னேன்’ – யார் அவர்?

இந்திய கிரிக்கெட்டின் தனித்த சாதனைகள் படைத்தவர் தோனி. கபில்தேவ்க்குப் பிறகு இந்திய அணிக்கு உலககோப்பையை வென்று கொடுத்த கேப்டன். அதுமட்டுமல்ல, டி20 உலககோப்பை நடத்தமுடிவெத்தார்கள். அதன் முதல் உலககோப்பையை வென்று தந்த கேப்டன் தோனிதான். இனி எத்தனை அணிகள் டி 20 கோப்பையை வென்றாலும், முதலில் வென்ற என்று பெருமை கிடைக்க முக்கியக் காரணம் தோனிதான். இந்நிலையில் கடந்த உலக கோப்பைக்குப் பிறகு தோனியைப் பற்றி கடும் விமர்சனங்கள் வந்தன. அவர் எப்போது ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்றும்
 

இந்திய கிரிக்கெட்டின் தனித்த சாதனைகள் படைத்தவர் தோனி. கபில்தேவ்க்குப் பிறகு இந்திய அணிக்கு உலககோப்பையை வென்று கொடுத்த கேப்டன். அதுமட்டுமல்ல, டி20 உலககோப்பை நடத்தமுடிவெத்தார்கள். அதன் முதல் உலககோப்பையை வென்று தந்த கேப்டன் தோனிதான். இனி எத்தனை அணிகள் டி 20 கோப்பையை வென்றாலும், முதலில் வென்ற என்று பெருமை கிடைக்க முக்கியக் காரணம் தோனிதான்.

இந்நிலையில் கடந்த உலக கோப்பைக்குப் பிறகு தோனியைப் பற்றி கடும் விமர்சனங்கள் வந்தன. அவர் எப்போது ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். அவர் ’இனி டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆட விருக்கிறேன்’ என்று அறிவித்தார்.

அதன்பின் சில போட்டிகளில் தோனி தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. பிசிசிஐயின் ஒரு முடிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுதான் தோனியை ஏ கிரேடு வீரர் எனும் பட்டியலிருந்து வெளியேற்றியது. அப்போதே இது கடும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதன் பின்னணி தற்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

Ramachandra Guha (Writer)

பிசிசிஐ (Board of Control for Cricket in India) நிர்வகிப்பதற்கு வினோத் ராய் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றவர்தான் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா. சில காரணங்களால் அக்குழுவிலிருது விலகிவிட்டார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில், “டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி, ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடும் தோனியை ஏ கிரேடு சம்பள பட்டியலிலிருந்து வெளியேற்ற சொன்னது நான்தான். பலரும் தயங்கினார்கள். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்’ என்பது உட்பல பல விஷயங்களைக் கூறியிருக்கிறார்.