என்னா அடி... இலங்கை பவுலர்களை மிரளவிட்ட வைபவ்
இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப்போட்டியில் 11 பந்துகளில் அரைசம் விளாசினார் வைபவ் சூர்யவன்ஷி.
இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டி இன்று டம்புள்ளா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து இந்திய ஏ அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்சி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் களம் புகுந்தனர். முதல் பந்தையே பவுண்டரி அடித்து அதிரடியாக துவங்கிய வைபவ் தலா 5 பவுண்டரிகள், சிக்ஸ் விளாசி நான்காவது ஓவர் முடிவதற்குள்ளாகவே அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 8 சிக்ஸ், 10 பவுண்டரி என 324.14 ஸ்ட்ரைக் ரேட்டில் 94 ரன்களை 9வது ஓவர் முடிவதற்குள்ளாகவே அடித்துவிட்டு விக்கெட்டானார்.
வைபவ் அதிரடி ஆட்டம் காரணமாக 20வது ஓவர் முடிவதற்கு முன்னதாகவே இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் உள்ளிட்டோர் 12 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கும் நிலையில், 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.