×

முதல் டெஸ்ட்- பும்ராவின் அபார பந்துவீச்சில் சுருண்ட தென்னாபிரிக்கா

 

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியானது இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சன் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார். இதன் மூலம் இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சு மற்றும் இரண்டு வேக பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. துவக்காட்டக்காரரான மார்க்கம் மற்றும் ரிக்கல்டன் அதிரடியாக அடி துவக்கம் தந்தனர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். ரிக்கல்டன் 23 ரன்களிலும் மார்க்கம் 31 ரன்களிலும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு அந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி அனைத்து கட்சிகளும் இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

தனது முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.12 ரன்கள் எடுத்த ஜெய் ஸ்வால் ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டம் இருந்து வெளியேறினார். கே எல் ராகுல் 13 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.