×

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி புனேவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஜோடியான ராய் மற்றும் பேர்ஸ்டோவை தொடக்கத்திலேயே வெளியேற்றினார் புவனேஸ்வர்குமார். சென்ற ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் இந்த முறை நிதானமாக விளையாடி 35 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர்
 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி புனேவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 329 ரன்கள் குவித்தது.

பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஜோடியான ராய் மற்றும் பேர்ஸ்டோவை தொடக்கத்திலேயே வெளியேற்றினார் புவனேஸ்வர்குமார். சென்ற ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் இந்த முறை நிதானமாக விளையாடி 35 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 15 ரன்களில் வெளியேறினார். அதன்பின் வந்த மலன் 50 ரன்களும்,லிவிங்ஸ்டன் 35 ரன்களும், மொயின் அலி 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் தொடர்ந்து இழுபறியில் இருந்தது.

இறுதிகட்டத்தில் சாம் கரண் மற்றும் அடில் ரசிட் இணை அரைசதம் கூட்டணி போட , போட்டி பதற்றத்துக்குள்ளானது. இந்தியாக்கு அச்சுறுத்திய இந்த கூட்டணியை ஷர்டுல் தாகூர் உடைத்தார் , 19 ரன்களில் அடில் ரசிட் , கோலியின் அசத்தலான கேட்சில் ஆட்டம் இழந்தார். சாம் கரண் ஒற்றை ஆளாக இந்தியா பந்து வீச்சை தும்சம் செய்தார். கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக பந்து வீசிய நடராஜனால் இங்கிலாந்து 322 ரன்களிலேயே இங்கிலாந்து அணி சுருண்டது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய சங்கரன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.