ஓய்வை அறிவித்தார் தோனி!
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் ஜாம்பவான் எம். எஸ். தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸின் அணி வழிகாட்டியாக (Team Mentor) நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தொடக்கக் காலம் முதல் பல வெற்றிகள், சவால்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களில் தோனி முக்கியப் பங்காற்றியுள்ளார். அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். இதனையடுத்து சென்னை எப்போதும் தோனியின் சொந்த இல்லமாக இருக்கும். வீரராக சென்னை சூப்பர் கிங்ச அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிய தோனி, தற்போது ஆலோசகராக பணியை தொடங்குகிறார்.
2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 17 சீசன்களிலும், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு 2 சீசன்களிலும் (2016, 2017) விளையாடியுள்ளார். எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனாக மொத்தம் 5 முறை ஐபிஎல் (IPL) கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 (CLT20) கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் சென்னை அணிக்கு மொத்தம் 7 முக்கிய சாம்பியன் பட்டங்களை அவர் பெற்றுத் தந்துள்ளார். 2027-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் சென்னை அணியின் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் ஆலோசகராக தோனி செயல்படுவார். காயம் காரணமாகக் கடந்த ஐபிஎல் தொடரில் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.