×

’2022 ஐபில் போட்டியிலும் தோனி விளையாடுவார்’ CSK நம்பிக்கை

’தோனி எப்போ ரிட்டயர்மெண்ட்டை அறிவிக்கப்போறார்?’ ’இந்த மேட்ச்தான் தோனியின் கடைசி மேட்ச்’ ‘இன்னும் ஏன் ஓய்வை அறிவிக்காமல் இருக்கிறார்?’ இந்தியாவின் அதிரடி கிரிக்கெட் வீர மஹேந்திர சிங் தோனியின் ஓய்வை பற்றி, பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர். ஆனால், தோனி தனது ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்க வில்லை. அவர் நடித்த விளம்பரத்தில் இதை கிண்டல்கூட செய்திருந்தார். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ‘ஒருநாள் உலககோப்பை’ யை வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இது
 

’தோனி எப்போ ரிட்டயர்மெண்ட்டை அறிவிக்கப்போறார்?’

’இந்த மேட்ச்தான் தோனியின் கடைசி மேட்ச்’

‘இன்னும் ஏன் ஓய்வை அறிவிக்காமல் இருக்கிறார்?’

இந்தியாவின் அதிரடி கிரிக்கெட் வீர மஹேந்திர சிங் தோனியின் ஓய்வை பற்றி, பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர்.

ஆனால், தோனி தனது ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்க வில்லை. அவர் நடித்த விளம்பரத்தில் இதை கிண்டல்கூட செய்திருந்தார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ‘ஒருநாள் உலககோப்பை’ யை வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இது நடந்தது 198 ஆம் ஆண்டில். அதன்பிறகு அசாருதீன், கங்குலி உள்ளிட்ட பல திறமையான வீரர்களின் தலைமையில் இந்திய அணி உலககோப்பை தொடரில் விளையாடியும் கோப்பையை வசப்படுத்த முடியவில்லை.

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்.

ஆனால், 2019 உலககோப்பை தொடர் முடிந்ததுமே தோனியின்  ஓய்வு குறித்து பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், ஐபில் போட்டியில் என்றைக்குமே அவர் ராஜாதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவானதிலிருந்து இருக்கும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே. தோனி இல்லாத சி.எஸ்.கேவை நினைத்தே பார்க்க முடியாது என்று ரசிகர்கள் பாச மழையை சோஷியல் மீடியாவில் பொழிவார்கள்.

தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸூம் தமிழக ரசிகர்கள் என்றால் தனி ஸ்பெஷல்தான். சென்ற ஐபில் போட்டியில் CSK டீமில் வயதான வீரர்கள் அதிகம் இருப்பதாகக் கிண்டல் செய்தார்கள். ஆனால், இவர்கள்தான் இறுதிப் போட்டியில் இறுதி ஓவர் வரைக்கும் டஃப் கொடுத்தார்கள்.

அதன் பாதிப்பு, இந்த ஆண்டு வயதான வீரர்கள் எனும் கமெண்ட் ‘எஸ்பீரியன்ஸ் வீரர்கள்’ என்பதாக மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரே பெயர் தோனி.

தோனி தொடர்ந்து இந்திய அணியில் விளையாடுவாரா என்பதற்கு பதில் இல்லை. ஆனால், ஐபிஎல் போட்டியில் அதுவும் CSK டீமில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

CSK டீமின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ஓர் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘2020, 2021 ஐபில் போட்டிகளில் மட்டுமல்ல, 2022 ஐபில் போட்டியிலும் தோனி விளையாடுவார் என்று நம்புகிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

இதன்மூலம் தோனியே விலக நினைத்தாலும் CSK டீம் விடாது போலிருக்கிறது