×

சென்னையில் தல தோனி.. ஐபிஎல் ஏலம் குறித்து சிஎஸ்கே  நிர்வாகிகளுடன் ஆலோசனை..

 


ஐபிஎல் ஏலம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தோனி சென்னை வந்துள்ளார்.

ஐபிஎல் (IPL 2022) மெகா ஏலம் பெங்களூருவில்  வரும் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில்  நடைபெற உள்ளது.  இந்த ஏலத்தில் பங்கேற்க அனைத்து அணிகளும் தீவிரமாகி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் பல்வேறு யூகங்களை வகுத்து வீரர்களை  தேர்வு செய்துவருகின்றனர்.  அந்தவகையில் சென்னை சூப்பர் கின்ஸ் அணியும் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

அந்தவகையில் ஐபிஎல்  ஏலம் தொடர்பாக அணி நிர்வாகத்துடன்  ஆலோசனை நடத்துவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார்.  கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு மெகா ஏலத்தில்  எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் என்பது  தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேற்று தோனி சென்னை வந்துள்ளார்.  

 சிஎஸ்கே அணியில்  வீரர்களை தேர்வு செய்வது போன்ற முக்கிய முடிவுகளையும் பல ஆண்டுகளாக தோனி எடுத்து வருகிறார்.  அடுத்த 10 ஆண்டுகளை மனதில் கொண்டு அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் படி தோணி, சிஎஸ்கே நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியதாகவும், இளம் வீரர்களை அதிகளவு சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  அதே நேரம் புதிய வீரர்களை மொத்தமாக களம் இறக்கினால், பலன் தெரிய பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால், சீனியர் வீரர்களையும் விட்டுவிடக்கூடாது என்பதில் தோனி உறுதியாக இருக்கிறார்.

தற்போது வரை சிஎஸ்கே அணி ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட், மொயின் அலி மற்றும் தோனி ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது. ஜடேஜா ரூ.16 கோடிக்கும் , தோனி ரூ 12 கோடிக்கும், மொயின் அலி ரூ.8 கோடிக்கும் , ருதுராஜ் கைக்வாட் ரூ.6 கோடிக்கும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ஏலத்தில் 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது. இதில் எந்தெந்த புதிய வீரர்களை சிஎஸ்கே  அணி வாங்க இருக்கிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..

The 💛 goes 😁, every single time! #ThalaDharisanam #WhistlePodu 🦁 pic.twitter.com/IihZJsuDVQ