×

பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியல்...ஏ பிளஸ் பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி!

 

பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், ஏ பிளஸ் பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுளது. அந்தன் படி, ஏ பிளஸ் பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஏ பிரிவில் கே.எல். ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகிய 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் பி பிரிவில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 
 
மேலும் சி பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ரவி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார்,  துருவ் ஜூரெல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷான், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.