×

‘இதுதான் தோனி வழி’ தோனியைப் பாராட்டும் ஆஸ்திரேலிய வீரர் யார் தெரியுமா?

கிரிக்கெட் தெரியாதவர்களும் கொண்டாடிய வீரர்களைப் பட்டியலிட்டால், அதில் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் நிச்சயம் மஹேந்திர சிங் தோனிதான் இடம்பெறுவார். அந்தளவுக்கு அவரின் புகழ் பரவியிருந்தது. விக்கெட் கீப்பராக இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்தவர் தோனி. அதிரடி பேட்ஸ்மேனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் ஆடியபோது சச்சின் டெண்டுல்கர், சவுரங் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகிய மூன்று பெரும் நட்சத்திரங்களும் அணியில் இருந்தனர். அத்தனை பேரையும் கடந்து மஹேந்திர சிங் தோனி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

கிரிக்கெட் தெரியாதவர்களும் கொண்டாடிய வீரர்களைப் பட்டியலிட்டால், அதில் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் நிச்சயம் மஹேந்திர சிங் தோனிதான் இடம்பெறுவார். அந்தளவுக்கு அவரின் புகழ் பரவியிருந்தது.

விக்கெட் கீப்பராக இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்தவர் தோனி. அதிரடி பேட்ஸ்மேனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் ஆடியபோது சச்சின் டெண்டுல்கர், சவுரங் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகிய மூன்று பெரும் நட்சத்திரங்களும் அணியில் இருந்தனர்.

 (Photo by Satish Bate/Hindustan Times via Getty Images)

அத்தனை பேரையும் கடந்து மஹேந்திர சிங் தோனி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தன் கேப்டன்ஷிப் சிறப்பானது என தோனி நிருபித்தார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்

டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான்.

கடந்த 15-ம் தேதி சரியாக முன்னிரவு 7.29 மணிக்கு தனது ஓய்வை அறிவித்தார் தோனி.

தோனியின் ஓய்வு பலரையும் வருத்தம் கொள்ளச் செய்தாலும், அவருடன் பழகியதைப் பகிரும் வாய்ப்பாக அதை மாற்றிக்கொள்கிறார்கள்.

உள்ளூர் வீரர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு வீரர்களின் பாராட்டையும் பெற்றுவருபவர் தோனி. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், தோனியைப் புகழ்ந்திருக்கிறார்.

கில்கிறிஸ்ட் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், ‘தோனிக்கு எதிராக விளையாடியது எப்போது இனிமையானதாகவே இருந்திருக்கிறது. சுறுசுறுப்பும் அமைதியுமே அவரது பாணி. அதன் வழியிலேயே ஓய்வையும் அறிவித்திருக்கிறார். இதுவே தோனி வழி. அவரது சாதனைக்களுக்கு வாழ்த்துகள்’ என்று வாழ்த்தியிருக்கிறார்.

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் எனப் போற்றப்பட்டவர் ஆடம் கில்கிறிஸ்ட். அவரின் வாழ்த்தும் பாராட்டும் முக்கியமானதாக இருக்கிறது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.