நள்ளிரவில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட அஸ்வின் - வீடியோ வைரல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நள்ளிரவில் அஸ்வின் பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 74 ரன்களும், ருத்ரான் கெய்க்வாட் 71 ரன்களும் எடுத்தனர்.