×

“அவள் என் கணவர்”- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பகீர் பஞ்சாயத்து

 

ஆஸ்திரேலிய துணை கேப்டன் ஆஷ் கார்ட்னர், தனது திருமண முறிவு காரணமாக ஏற்பட்ட வேதனைக்கு மன்னிப்பு கோரியதோடு, தனது தலைமைக்கு ஆதரவளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர், ஓர் ஓரினச் சேர்க்கையாளர். மோனிகா ரைட் என்ற பெண்ணை திருமணம் செய்து, தானே கணவராக வாழ்ந்தார். ஆனால் யார் கண் பட்டதோ.. சமீபத்தில் இவர்களிடையே பிரிவு வெடித்துள்ளது. கார்ட்னருக்கு சக வீராங்கனை ஜார்ஜியாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனைவி மோனிகா பரபரப்பை கிளப்பியிருந்தார். இது குறித்து கடைசியாக வாய் திறந்துள்ள கார்ட்னர், மனைவி மோனிகாவை பிரிந்ததும் கள்ளத்தொடர்பு சர்ச்சையும் தனது பர்ஸனல் என்றும் தன்னை துணை கேப்டனாகவே நீடிக்கச் செய்த `கிரிக்கெட் ஆஸ்திரேலியா’வுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஷ்லே கார்ட்னர் (Ashleigh Gardner) ஓர் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் மகளிர் அணியின் துணை கேப்டன் ஆவார். இவர் திறமையான ஆல்-ரவுண்டர் (வலது கை பேட்டர் மற்றும் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்) என்பது குறிப்பிடதக்கது.