×

ஊக்கமருந்து விவகாரம்- தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை

 

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிக்காக ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொண்ட போது தனலட்சுமி தோல்வி அடைந்தார் இதன் காரணமாக சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை அவருக்கு மூன்று ஆண்டு காலம் தடை விதித்து இருக்கிறது...

பொதுவாக ஒரு வீரரோ வீராங்கனைகளோ ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தால் நான்கு ஆண்டுகள் தடை செய்வது வழக்கம் ஆனால் தனலட்சுமி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதன் காரணமாக தேசிய தடகள ஊக்கமருந்து தடுப்பு முகமை பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு ஒரு ஆண்டு காலம் குறைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காமன்வெல்த் போட்டியில் தனலட்சுமி 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதாக இருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனலட்சுமி தங்கப்பதக்கம் என்று காமன்வெல்த் போட்டியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடதக்கது.