×

174 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் - ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா

 

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. . முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்களும், ரிஷப் பந்த் 97 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லக்மல், விஷ்வா ஃபெர்னாண்டோ, எம்பூல்டேனியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறியது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், பதும் நிஷாங்கா மட்டும் நிலைத்து நின்று ஆட மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். 

இதனால் அந்த அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மறுமுனையில் அவுட்டாகாமல் இருந்த நிஷாங்கா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சிலும் அசத்தினார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதன் மூலம் 400 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்தது. ஃபாலா ஆன் என்றால் இந்தியா முன்னிலையில் உள்ள 400 ரன்களை இலங்கை அணி கடந்தால் வெற்றி என்பதாகும்.