×

காமன்வெல்த் - இந்திய மகளிர் ஹாக்கி அணியில் ஒருவருக்கு கொரோனா

 

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள மகளிர் ஹாக்கி அணியில் நவ்ஜோத் கவுர் என்ற வீராங்கணைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் பங்கேற்றுள்ளது. இ

இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்தி, அடுத்து வேல்ஸ் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்துக்கு முன்பாக வீராங்கனைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இந்த பரிசோதனையில், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நடுகள வீராங்கனை நவ்ஜோத் கவுருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட நவ்ஜோத் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.  நவ்ஜோத் கவுர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.