×

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் - 32 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு தங்கம்

 

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு தங்கம் வென்றுள்ளது. 

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த், ஐரோப்பிய சாம்பியனான பரைம் முஸ்தபாயேவ் உடன் விளையாடினார். இதில், 11-0 என்ற புள்ளி கணக்கில் சுராஜ் வஷிஷ்த் வெற்றி பெற்றார். இதன் மூலம் 32 ஆண்டுக்கு பின்னர் ஜூனியர் மல்யுத்தப்போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்து. கடைசியாக 1990ம் ஆண்டு பப்பு யாதவ் தங்கம் வென்றிருந்தார்.  இதனால் இந்திய வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்றவர் என்ற சாதனையையும் சுராஜ் படைத்துள்ளார்.
 
ஒட்டு மொத்தத்தில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இது 3வது பதக்கம் ஆகும். அனைத்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவிற்கு இது 4வது பதக்கம் ஆகும். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்த சுராஜ் வஷிஷ்த்திற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.