×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

 

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. பார்டர்- கவாஸ்கர் தொடர் என அழைக்கப்படும் இந்த டெஸ்ட் தொடர் ஆனது மிகவும் புகழ் பெற்றது.

2017ல் இந்தியாவிலும்,2018 மற்றும் 2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த 3 தொடரையும் இந்தியா கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த வருடம் இந்த தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை இந்தியா கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வரும். மாறாக தொடரை இழந்தால் இந்திய அணி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறும்.

ஆகையால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் விளையாடும் முதல் 2 போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது.இதில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களாக கார் விபத்தில் காயமடைந்த ரிசப் பன்ட்க்கு பதிலாக இசான் கிசான் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட காலமாக காயத்தில் உள்ள ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணியில் சேர்ந்துள்ளார். மேலும் டி20 போட்டிகளிலும் கலக்கி வரும் சூரியகுமார் யாதவ் இம்முறை டெஸ்ட் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியின் வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (து.கேப்டன்), சுப்மன் கில், சித்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஆர் அஷ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.