×

இந்தியா vs இலங்கை டி20 தொடரில் திடீர் சேஞ்ச்... என்ன காரணம்?

 

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் ஆடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. முதலில் ஒருநாள் தொடர் ஆரம்பமானது. மூன்று போட்டிகளிலும் வென்ற இந்திய அணி வாஷ்அவுட் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்அவுட்டாக்கிய முதல் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா என்ற பெருமையையும் அவர் படைத்தார். தற்போது டி20 தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இன்று முதல் போட்டி நடக்கிறது.

இந்தியாவிற்கு ஒவ்வொரு டி20 போட்டிகளும் முக்கியவத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அக்டோபரில் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான அணியைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக்கோப்பையை இந்தியா வெல்லவில்லை. அதேபோல கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது. ஆகவே இம்முறை கோப்பையை வென்றாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தாண்டு நடைபெறவிருக்கும் பல்வேறு டி20 தொடர்களில் இந்தியா கவனம் செலுத்துகிறது. அந்த வகையில் இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் வருவதாக இருந்தது. 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் விளையாடும் என சொல்லப்பட்டது. முதலில் டெஸ்ட் பின்னர் டி20 என அட்டவணை அறிவிக்கப்பட்டது. ஆனால் முதலில் டி20 நடத்த வேண்டும் என இலங்கை கோரியது. அதனை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ டி20 தொடரை முதலில் நடத்த சம்மதித்துள்ளது. அதன்படி பிப்.24 முதல் டி20 தொடங்கவிருக்கிறது. பிப்.26,27இல் இதர போட்டிகளும் மார்ச் 4-8இல் முதல் டெஸ்ட்டும் 12-16இல் 2ஆம் டெஸ்ட்டும் நடைபெறுகிறது.