×

275க்கு சுருண்ட தென்னாபிரிக்கா.. மீண்டும் அசத்திய அஸ்வின்!

தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபாரமாக ஆடி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் மயங்க் அகர்வால் 108 ரன்கள், புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் கண்டனர். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம்
 

தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபாரமாக ஆடி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் மயங்க் அகர்வால் 108 ரன்கள், புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் கண்டனர்.

தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபாரமாக ஆடி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் மயங்க் அகர்வால் 108 ரன்கள், புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் கண்டனர். கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
 

அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்னாபிரிக்கா அணி 2ஆம் நாள் முடிவில் 36/3 என தடுமாறியது. 

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்று மதிய உணவு இடைவேளைக்குள்ளேயே அனைத்து விக்கெட்டுக்களையும் தென்ஆப்பிரிக்க அணி இழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைத்து ஆடிய டி காக் மற்றும் டு பிளேஸிஸ் அணிக்கு ரன் சேர்த்தனர். ஆனால் அவர்களும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது.

இறுதியில் மகாராஜா மற்றும் பிலாந்தர் இருவரும் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த 100 ரன்களை சேர்த்தனர்.  இதனால் அணி மோசமான ஸ்கோரில் இருந்து சற்று முன்னேறியது. இறுதியாக அஸ்வினின் மாயாஜால சுழலால் 275 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்க அணி சுருண்டது. 

இதன்மூலம் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்றது. நாளை மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-vicky