×

#Rewind2021: 11 நாட்கள் சிரிக்க தடை... வெளிநாட்டு விநோதம்

 

2021 ஆம் ஆண்டு பல்வேறு மறக்கமுடியா நினைவுகளை நம்மிடையே விட்டு செல்கிறது என்றே சொல்லலாம். உள்ளூரில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சில சிறப்பான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

அமெரிக்காவில்  2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று ஆட்சி மாற்றாம். ஆம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோற்று ஜோ பைடன் அதிபரானார். அதேபோல் இந்தியவம்சாவளியான கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் விலகி கொண்டதையடுத்து, தாலிபான் வசம் ஆட்சி கைமாறியது. இதனால் அங்குள்ள மக்கள் தாலிபான்களுக்கு பயந்து, அவர்களிடமிருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளுக்கு தப்பியோடிய நிகழ்வு காண்போரை கலங்கடித்தது. 

கொரோனா முதல், இரண்டு, மூன்று என சென்றுகொண்டிருந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் உதயமானது உருமாறிய ஒமிக்ரான் பரவல். தற்போது இந்த வகை வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

சீனாவில் கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பிரிட்டனை சேர்ந்த கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு முதன்முறையாக சுற்றுலா சென்றுவந்தார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் தந்தை கிம் ஜோங் இல்லின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள், டிசம்பர் 11 ஆம் தேதி வந்தது. இதனையொட்டி, அநாட்டு மக்களை 11 நாட்களுக்கு சிரிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 11 நாட்களுக்கு மது அருந்தவும், கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கவும், பிறந்த நாள் கொண்டாடவும், சந்தோஷமாகவும் தடை விதிக்கப்பட்டது. 

இங்கிலாந்தில் தனது தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது 20 வயது இளம்பெண் வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டன் நீதிமன்றத்தில்  எவீ டூம்ஸ் என்பவர், மருத்துவர் பிலிப் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் முதுகுபகுதி பாதிக்கப்பட்டதுடன், குறைபாடுடன் பிறந்துள்ளேன். அம்மாவிற்கு போலிக் ஆசிட் மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், என் அம்மா சிறிது காலம் கழித்து கர்ப்பம் அடைந்திருப்பார். அவரின் கர்ப்பம் தள்ளி சென்று, சிறிது நாட்கள் கழித்து கர்ப்பம் அடையும்போது ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறந்திருக்கும். எனவே நான் குறைபாடுடன் பிறக்க அந்த மருத்துவரே காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அனைவருமே காலில் ஒரே மாதிரியான டிசைன் உடைய காலணியையும் ஒரே வண்ணம் கொண்ட  காலுறைகளை அணியவே விரும்புவோம். ஆனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 10 வயது சிறுமி தாஷா கஸ்னெட்சோவா, சில குழந்தைகளின் தாய், அவசரமாக புறப்படும் நேரத்தில் காலுறைகளை தேட நேரமில்லாமல், காலுக்கு ஒரு காலுறைகளை அணியும் முயற்சியை தொடங்கினார். இதுவே நாளடைவில் அங்கு ட்ரெண்டானது

அமெரிக்காவில் மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவக் கருவிகளின் உதவியோடு சுவாசித்த நபருக்கு, பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனை செய்யப்பட்டது.