×

“ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு
 

ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிதாக மாநில நிர்வாகிகளை கட்சி தலைவர் கமல்ஹாசன் நியமித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அணியின் செயலாளராக பத்மபிரியாவையும், பொறியாளர் அணி செயலாளராக வைத்தீஸ்வரனையும் நியமித்துள்ளார். மேலும் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு செயலாளராக சையத் சயிபுதீனையும் தலைமை நிலையை பரப்புரையாளராக அருணாச்சலத்தையும் நியமித்துள்ளார்.