×

‘முறையாக உணவு வழங்கப்படுவதில்லை’.. கொரோனா நோயாளிகள் புகார்!

சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆரம்ப கட்டத்தில் சென்னையில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றன. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவில் இருந்து மீள
 

சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆரம்ப கட்டத்தில் சென்னையில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றன. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவில் இருந்து மீள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, கொரோனாவால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஒழுங்காக உணவு வழங்கப்படுவதில்லை என்றும் மருத்துவமனை வளாகம் முறையாக சுத்தப்படுத்தப் படவில்லை என்றும் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறை, சீர்காழி அருகே அரசு மருத்துவமனை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் முறையாக உணவு வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்கள் தங்களது வீட்டிற்கே செல்வதாக கூறிய கொரோனா நோயளிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நோயாளிகளை மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.