×

‘பாக்கித் பணத்தைக் கொடுங்கள்’ ‘: தூக்குக்கயிற்றுடன் டவரில் ஏறி மிரட்டிய விவசாயி!

பவர் கிரிட் நிறுவனம் விவசாயியின் ஒப்புதலுடன் உயர் அழுத்த மின் கோபுரத்தை அமைத்துள்ளனர். சேலம் மாவட்டம் சலவடை கிரமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில், பவர் கிரிட் நிறுவனம் விவசாயியின் ஒப்புதலுடன் உயர் அழுத்த மின் கோபுரத்தை அமைத்துள்ளனர். அந்த நிலத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் அவர் நிலத்தில் செல்லும் மின் ஒயர்களுக்காக கூடுதலாகப் பணம் தருவதாகவும் விவசாயியிடம் கூறியுள்ளனர். பேசிய தொகையில் பாதி தொகை
 

பவர் கிரிட் நிறுவனம் விவசாயியின் ஒப்புதலுடன் உயர் அழுத்த மின் கோபுரத்தை அமைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சலவடை கிரமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில், பவர் கிரிட் நிறுவனம் விவசாயியின் ஒப்புதலுடன் உயர் அழுத்த மின் கோபுரத்தை அமைத்துள்ளனர். அந்த நிலத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் அவர் நிலத்தில் செல்லும் மின் ஒயர்களுக்காக கூடுதலாகப் பணம் தருவதாகவும் விவசாயியிடம் கூறியுள்ளனர். பேசிய தொகையில் பாதி தொகை அதாவது ரூ.5 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு டவரை அமைத்துள்ளனர். மீதி பணத்தையும், கூடுதலாகப் பேசிய பணத்தையும் பிறகு தருவதாகக் கூறியுள்ளனர். இன்னும் அந்த டவரின் கட்டிடப் பணி நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது. 

அந்த விவசாயி பாக்கி பணத்தை பவர் கிரிட் நிறுவன அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்து கிருஷ்ணனுக்குச் சரியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த விவசாயி இன்று பவர் கிரிட் நிறுவனம் அமைத்த டவரில் தூக்கு கயிற்றுடன் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கும், டவரை அமைத்த அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின், அங்கே விரைந்து சென்ற பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் பாக்கி பணத்தை விரைவில் திருப்பித் தருவதாக உறுதியளித்ததை அடுத்து, அந்த விவசாயி டவரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.